Today Rasipalan 26.8.2017 :

Today Rasipalan 26.8.2017

மேஷம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ரிஷபம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
மிதுனம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
கடகம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
சிம்மம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கன்னி
காலை 6. 07 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீண் டென்ஷன் வந்து போகும். கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அழகு, இளமைக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
துலாம்
காலை 6. 07 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
விருச்சிகம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
தனுசு
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சகோதரங்கள் பாசமழைப் பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வி. ஐ. பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மகரம்
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கும்பம்
காலை 6. 07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். நண்பகல் முதல் மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
மீனம்
காலை 6. 07 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உடல் நலம் பாதிக்கும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

MBBS ADMISSION REGARDING:

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர போலி இருப்பிடச் சான்று கொடுத்த கேரள மாணவர்கள்: விசாரணை நடத்த காவல்ஆணையர் உத்தரவு:

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு போலியான இருப்பிடச் சான்று கொடுத்து கேரள மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான கலந்தாய்வை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் என தனித்தனியாக தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்டவெளிமாநிலங்களில் படித்த தமிழக மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

FREE COACHING FOR INSURANCE COMPANY POST:

இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உதவியாளர் பணி: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் இலவச பயிற்சி

யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள 1500 உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு சென்னையில் நடக்க உள்ள இலவச பயிற்சி வகுப்புகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தோர் பங்கேற்கலாம்.
இலவச பயிற்சி வகுப்புகள்

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை கடந்த 2011 முதல் நடத்தி வருகின்றன. தமிழகம் முழுவதும் 12 மையங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.300 பேர் தேர்வில் வெற்றி
இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். கல்லூரிபேராசிரியர்கள், இன்சூரன்ஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பயிற்றுநர்களாக இருந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.இன்று தொடக்கம்தற்போது, யுனைடெட் இந்தியா மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் 1,500 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் இன்று முதல் தொடங்குகின்றன.

சனி, ஞாயிறுகளில் வகுப்பு

பாரிமுனையில் உள்ள சிஐடியு அலுவலகம் எண், 6 கச்சாலீஸ்வரர் கோயில் அக்ரஹாரத்தில் (அரண்மனைக்கார தெரு) உள்ள பயிற்சி மையத்தில் தொடங்கும் இந்த பயிற்சி வகுப்புகள், வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் காலை 9.30 முதல் மாலை 5.30மணிவரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ள சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தோர் 9444641712, 9444982364, 9444241696, 9444928162, 9791116753, 9486111001 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

MBBS BDS ADMISSION REGARDING:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்குபொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது: மருத்துவக் கல்லூரிகளில் சேர 1,029 பேர் அனுமதிகடிதம் பெற்றனர்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான முதல்நாள் கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 26 இடங்களை பிடித்தவர்கள் பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் இருந்த 10 மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர்.
மொத்தம் 1,029 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் நடந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 14 மாணவர்கள்கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தைப் பெற்றனர்.

26 மாணவர்கள் வரவில்லை

இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்க 1,209 மாணவர்களுக்கு (நீட் மதிப்பெண் 656 முதல் 368 வரை) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தரவரிசைப் பட்டியலில் முதல் 26 இடங்களை பிடித்த மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிலும், ஜிப்மர் உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். அதனால் அந்த மாணவர்கள் வரவில்லை” என்று தெரிவித்தனர்.

அடுத்த10 மாணவர்கள்

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் 594 மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் 27-வது இடத்தில் இருந்த மாணவர் ஏ.அஸ்பாக் சுலைமான் முதலிடத்துக்கு வந்தார். மாணவர் ஏ.அஸ்பாக் சுலைமான் உட்பட தரவரிசைப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருந்த 10 மாணவ, மாணவிகள் சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்எம்சி) தேர்வு செய்தனர். அவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை சுகாதாரத் துறைச் செயலாளர்ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். அப்போது மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எட்வின் ஜோ, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைச் செயலாளர் செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். மொத்தம் 1,029 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

கலந்தாய்வில் பரபரப்பு

கலந்தாய்வுக்கு வந்திருந்த அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள், நாங்கள் தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறோம். எங்களுக்கு அரசுமருத்துவக் கல்லூரிகளில் கண்டிப்பாக இடம் கிடைக்கும். எங்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு அதிகாரிகள், “நீங்கள் ஏற்கெனவே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டீர்கள். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நீங்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்தனர். இதனால் கலந்தாய்வு அறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களிடம் நான் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேரவில்லை. நான் கொடுத்துள்ள இருப்பிடச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் உண்மை என்ற உறுதிமொழியைப் பெற்று, அனைத்து ஆவணங்களை சரிப்பார்த்த பின்னரே மாணவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கின்றனர்.

போலியான இருப்பிடச் சான்று கொடுத்தோ அல்லதுதவறான முறையில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுப் பிரிவினர்களுக்கான கலந்தாய்வு வரும் 30-ம்தேதி வரை நடைபெறுகிறது. 31-ம் தேதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு செப்டம்பர் 4-க்குள்ளும், பிடிஎஸ் படிப்புகளுக்கு செப்டம்பர் 10-க்குள்ளும் கலந்தாய்வு நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ONAM CHENNAI DISTRICT LOCAL HOLIDAY:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு செப். 4 உள்ளூர் விடுமுறை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப். 4 (திங்கள்) அன்று சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதனை ஈடுசெய்யும் வகையில் செப். 23 (சனி) அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும்.இருப்பினும் செப். 4-ம் தேதி அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.

NEET LEE ENTRANCE EXAM COACHING CENTRE EDUCATIONAL DISTRICT WISE:

கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையம் - கல்வித்துறை திட்டம்

'நீட்' விவகாரத்தால், கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., --- பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வு முடிவு அடிப்படையில், நேற்று கவுன்சிலிங் துவங்கியது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் மத்தியில், போட்டி, நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில், இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக மாணவர்கள், மத்திய - மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகள்,நுழைவுத்தேர்வுகளை, எதிர்கொள்ளும் வகையில், 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய, வினா வங்கி தொகுப்பு தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.

இதுதவிர, நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத்தேர்வு எழுத, விருப்பமுள்ள மாணவர்களை வழிநடத்த, கல்வி மாவட்டத்துக்கு ஒரு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்ட அறிவு இருந்தால் தான், போட்டித்தேர்வை எதிர்கொள்ள முடியும்.
எனவே, பேராசிரியர்கள், துறை வல்லுனர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரால், வார இறுதி நாட்களில் பயிற்சிகள் அளிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

TEACHERS TRAINING AND NEW SYLLABUS REGARDING:

வேகமெடுக்கிறது பாடத்திட்ட மாற்றம் ஆசிரியர்களுக்கும் கற்பிக்கப்படும்

புதிய பாடத்திட்ட தயாரிப்புடன், ஆசிரியர்களுக் கான கற்பித்தல் முறையை மாற்றவும், அவர்க ளின் பயிற்சிக்கு, புதிய விதிகள் அடங்கிய புத்தகம் தயாரிக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 14 ஆண்டுகள் பழமையான, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம்; ஏழு ஆண்டு கள் பழமையான, 1 - 10ம் வகுப்பு வரையிலான, பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன.
இதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட் டையன் தலைமையில், உயர்மட்டக் குழுவும், அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில், பாடத்திட்டத்துக்கான கலைத்திட்டக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளன.
கருத்துக் கேட்பு:


இந்த குழு, புதிய பாடத்திட்ட தயாரிப்புகளில் ஈடு பட்டுள்ளது. தற்போது,மண்டல வாரியாக கருத் துக் கேட்பு கூட்டம் நடத் தப்படுகிறது.

இந்நிலையில், புதிய பாடத்திட்ட தயாரிப்பு மட்டுமின்றி, மாணவர் களுக்கான ஆய்வகம் அமைத்தல், நுாலகம் அமைத் தல், அதில் இடம் பெற வேண்டிய புத்தகங்கள் குறித்த விதிகள் என, உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்தும், கல்வியாளர் கள் குழு, வழிகாட்டுதலை வழங்க உள்ளது.

அதே போல், புதிய பாடத்திட்டப்படி, மாணவர்களுக் கான புத்தகம் தயாரிப்பதுடன், அதை கற்பிக்கும் முறைக்கு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி என, ஆலோசனை வழங்கப்பட உள்ளது. புதிய திட்டத்திலான பாடங்களை, எந்த விதமாக கற்றுத் தர வேண்டும் என விளக்கும், கற்பித்தல் வழிமுறை புத்தகமும் தயாரிக்க, பள்ளிக்கல்வித்

துறை முடிவு செய்துள்ளாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


முழு வேகம்:

பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலராக, பிரதீப் யாதவ் பொறுப்பு வகிப்பார் என, அரசு அறிவித்துள்ள நிலையில், இத்துறையின் செயலராக இருந்த உதய சந்திரன், தற்போது, புதிய பாடத்திட்டத்திற்கான செயலராக மட்டும் பணியாற்றுவார். உதய சந் திரன் வருகையில்,புதிய பாடதிட்ட பணி, முழு வேகம் எடுக்கும் என, எதிர்பார்க்கபடுகிறது

Government Employees Strikr and Salary Regarding:

ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் - தொடக்க கல்வி அலுவலர்கள் உத்தரவு:

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின், ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட், 22ல், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அன்று, விடுப்பு வழங்கப்படாது எனவும், பணிக்கு வராதவர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும், முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.இருப்பினும், வேலைநிறுத்த போராட்டத்தில், தொடக்கக் கல்வித்துறையில் மட்டும், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும், 20ம் தேதிக்குள், சம்பள பட்டியல் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

இம்மாதத்தில் முன்கூட்டியே சம்பள பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்து, கருவூல செலுத்து சீட்டு மூலம் செலுத்த, மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Government School 11th Admission Related News:

மேல்நிலைக் கல்வி மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 1990-ல் பிறப்பித்த அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுமதுரை ரத்தினபுரத்தைச் சேர்ந்த டி.ஆரோக்கியம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் சேர்க்கையில், குறிப்பாக கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு ஒரு சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 1990-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இருப்பினும் இந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை.இதனால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் சீட் கிடைக்காத நிலை உள்ளது.மேல்நிலைக் கல்வியில் முதல் பிரிவு (கணிதம், அறிவியல், கணினி அறிவியல்) பயிலும் மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர முடிகிறது. அதே நேரத்தில் ஆதிதிராவிடர்வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல் பிரிவில் பயிலும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர்த்து பிற கல்வி நிறுவனங்களில் மேல்நிலைக் கல்வியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.மனுதார் வழக்கறிஞர் அழகுமணி, ‘அரசாணைப்படி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு கூடாது’ என்றார்.

இதையடுத்து மேல்நிலைக் கல்வியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 1990-ல் பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Today Rasipalan 25.8.2017 :

Today Rasipalan 25.8.2017

மேஷம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ரிஷபம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மிதுனம்
எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கடகம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உறவினர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கன்னி
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
துலாம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் ஏற்படும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
விருச்சிகம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
தனுசு
உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மகரம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கும்பம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
மீனம்
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

NOKIA SMART PHONE-SALE STARTING:

நொடிகளில் விற்று தீர்ந்த நோக்கியா: அடுத்த விற்பனை எப்பொழுது?

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய அடுத்த சில நொடிகளில் முழுமையாக விற்று தீர்ந்தாக அமேசான் தெரிவித்துள்ளது.


அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்ட்போனை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.  
நோக்கியா 6 அடுத்த விற்பனை ஆகஸ்டு 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அமேசான் தளத்தில் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா 6 மீது ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.  
வோடோபோன் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டாவிற்கு கூடுதலாக 45 ஜிபி டேட்டா ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.  
மேக்மைட்ரிப் (Makemytrip.com) தளத்தில் ரூ.2,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் கின்டிள் புத்தகங்களில் அதிகபட்சம் 80 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது

DSE PROCEEDINGS-எரிசக்தி விழிப்புணர்வுக்காக ஓவியப்போட்டி நடத்துதல் சார்ந்து -இயக்குனர் உத்திரவு

DSE PROCEEDINGS-எரிசக்தி விழிப்புணர்வுக்காக ஓவியப்போட்டி நடத்துதல் சார்ந்து -இயக்குனர் உத்திரவு

ONE DAY SALARY CUT FOR STRIKE | SALEM DEEO

ONE DAY SALARY CUT FOR STRIKE | SALEM DEEO 

 

EMIS - Important Announcement : We are happy to announce that our portal will be relaunch after 29th August

11TH MODEL QUESTION PAPER RELATED POST:

பிளஸ் 1 மாதிரி வினாவில் 'பெரிய' மாற்றங்கள்

பிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், 10 மதிப்பெண் போன்ற பெரிய வினாக்கள் முற்றிலும் நீக்கப் பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், சமஸ் கிருதம் போன்ற பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்படவில்லை.நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டம், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதில் நடப்பாண்டு முதல் பிளஸ் 2வில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 மதிப்பெண் என்பதை பிரித்து, பிளஸ் 1, பிளஸ் 2வில் தலா 100 மதிப்பெண் என்ற அடிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக பிளஸ் 1 மாதிரி வினாத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டு களாக 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2க்கான பேட்டன், மாதிரி வினா,விடையளித்தல் முறை போன்றவை முற்றிலும் மாறி உள்ளதாகவும் பிற மாற்றம் குறித்தும் ஆசிரியர்கள் கூறியதாவது:

தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் உட்பட 30 பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், சமஸ்கிருதம் பாடங்களுக்கு மாதிரி வினா வெளியிடப்படவில்லை.

முன்பு மொழிப்பாடத்தில் 1 மார்க் வினா இருக்காது. தற்போது புதிதாக சேர்த்துள்ளனர். பிற பாடத்துக்கு 4 கொடுத்து, 3 விடை எழுத
சொல்வார்கள். தற்போது 4ஐயும் எழுத வேண்டும்.10 மார்க் நெடுவினா எழுதுவர். அதை முற்றிலும் நீக்கி விட்டு,5 மதிப்பெண் வினாவாக்கி,எண்ணிக்கையை ஒவ்வொரு பாடத்துக்கும் அதிகரித்து ள்ளனர்.

முன்பு சில பாடங்கள் அல்லது சில பகுதியை விடு தல் செய்வார்கள். இப்போதுள்ள வினாப்படி, முழு புத்தகத்தையும் படித்தே ஆக வேண்டும். இவ் வினா முறை, போட்டித்தேர்வுக்கானது போல உள்ளது.

முன்பு மொழி பாடத்தில், எந்த மதிப்பெண் வினா விலும் கட்டாயமாக, குறிப்பிட்ட வினாவை எழுத வேண்டும் என இருக்காது. ஆனால் இயற்பியல், வேதியியல் போன்ற பாடத்தில் கட்டாயம் எழுத வேண்டும் என்ற வினா இருந்தது. குறிப்பிட்ட பாடத் தில் இருந்துகட்டாயமாக வினா வரும் எனவும் இருந்தது.

தற்போது, குறிப்பிட்ட பாடத்தில் இருந்து வினா வரும் என குறிப்பிடாமல், அனைத்து பிரிவிலும் குறிப்பிட்ட வினாவை கட்டாயம் எழுத வேண்டும் என, வினாத்தாளில் குறிப்பிட்டுள்ளனர்.

முன்பு லெட்டர் ரைட்டிங், கட்டுரை போன்றவை 10 மதிப்பெண் வினாவாக இருந்தது. தற்போது 5 மதிப் பெண் வினாவாகிவிட்டது. இதனால் 5, 2, 1 மதிப்பெண் வினாக்களில் எண்ணிக்கை அதிகரித் துள்ளதால், மாணவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்காது. தேர்வில் மொத்தம் 200 மதிப்பெண் என்பதை 100 ஆக குறைத்து, தேர்வு காலம் 3 மணி நேரம் என்பதை 2:30 மணி நேரமாக குறைத்துள்ளனர்.

தற்போது 7 - 5 மதிப்பெண் பெரிய வினா 7 - 3மதிப் பெண் நடுத்தர வினா, 7 - 2 மதிப்பெண் வினா, 20 - 1 மதிப்பெண் வினா என மொழிப்பாடத்தில் வருவ தால், 2:30 மணி நேரத்துக்குள் எழுத முடியாது.

இதுவரை இல்லாத வகையில் நீதி, பிரச்னை தொடர்பான வினாவை கேட்டு, அதற்கான விடையை மாணவரே 'தீர்வு' சொல்வது போல சில வினாக்கள் வருகின்றன. அவ்வினாவுக்கு
மாணவரின் பதிலுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும் என உள்ளது.

தமிழில் குறிப்பிட்ட பகுதி, ஹிந்தி உள்ளிட்ட பல பாடங்களுக்கான வினாக்கள் டைப் அல்லது கம்ப்யூட்டரில் பிரின்ட் செய்யப்படா மல், அவசர கோலத்தில் கையால் எழுதி வெளியிட்டுள்ளனர். அதில் பல அடித்தல் திருத்தங்களும் உள்ளன.

கடந்த ஜூன் 7 ல் பள்ளி திறக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்புவரை, கடந்தாண்டு மாதிரியை பின்பற்றிவிட்டு, தற்போது புதிய மாதிரி வினா முற்றிலும் மாறுபட்டுள்ளதால், முதலில் இருந்து பாடத்தையும், வினாக்களை யும் மாணவர்களுக்கு விளக்க வேண்டி உள்ளது.

வினா வழங்கப்பட்டாலும், விடை எவ்வாறு இருந்தால் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும், எந்தெந்த குறைகளுக்கு எவ்வளவு மதிப்பெண் குறைக்க வேண்டும் என்பது போன்ற குறிப்புகள் இல்லாததால், புதிய வினாவுக்கு ஏற்ப, விடைகளை ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு விதமாக சொல்லித்தரவும், மாணவர்கள் பதிவு செய்யும் நிலை ஏற்படும். இதனால், மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவதில் சிக்கல் எழும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

MBBS GENERAL COUNSELLING-TODAY 25.08.2017:

அசல் சான்றிதழ் இல்லாவிட்டாலும் பங்கேற்கலாம் : மருத்துவ படிப்புக்கு இன்று பொது கவுன்சிலிங்

''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங்கில்,அசல் சான்றிதழ்கள் இல்லையென்றாலும், மாணவர்கள் பங்கேற்கலாம்,'' என, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கை துவக்கி வைத்த, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தியுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், கவுன்சிலிங்கில் பங்கேற்க, 500 ரூபாய்க்கும், கல்வி கட்டணத்துக்காகவும், வங்கியில், 'டிடி' எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்; அதற்காக கவலைப்பட வேண்டாம். கவுன்சிலிங் நடைபெறும் இடத்தில், நேரடியாக பணத்தை செலுத்தி ரசீதை பெற்று கொள்ளலாம்; இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.'நீட்' தேர்வு அடிப்படையில், முதன் முதலாக கவுன்சிலிங் நடைபெறுகிறது.

RE TOTAL RESULT TOMORROW-26.08.2017:

பிளஸ் 2 துணை தேர்வு: நாளை மறுகூட்டல் 'ரிசல்ட்'

சென்னை: பிளஸ் 2 துணை தேர்வு, மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் நாளை(ஆக., 26) வெளியாகின்றன.பிளஸ் 2 துணை தேர்வை, 51 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவு வந்த பின், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு பலர் விண்ணப்பித்தனர்.
அவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல், scan.tndge.in என்ற, இணையதளத்தில், நாளை வெளியாகிறது. 'மதிப்பெண் மாறாதவர்களின் விபரங்கள், இந்த பட்டியலில் இடம் பெறாது. 'மதிப்பெண் மாற்றம்உள்ளவர்கள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், புதிய மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் -உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் -உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார். அவர் நீக்கப்படவில்லை. உதயசந்திரன் இனி முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார். உதயசந்திரன் ஐஏஎஸ் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். இந்தநிலையில் உதயசந்திரனை ஐஏஎஸ்ஐ மாற்றாமல் அவருக்கு மேல் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது அரசு.இதனிடையே மாவட்ட ஆட்சியர்கள் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த சம்பத் மாற்றப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட ஆட்சியராக ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆட்சியராக பிரசாந்த் நியமனம்.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாற்றம் புதிய ஆட்சியராக லதா நியமனம்.சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.

How to make Jaggery-paal-kolukattai ?? Jaggery-paal-kolukattai.inayagar chathurthi Special:

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வெல்லம் பால் கொழுக்கட்டை 

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வெல்லம் பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1/2 கப்
பால் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை :

ஒரு வெறும் வாணலியில் அரிசி மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவில் ஊற்றி, ஒரு கரண்டி காம்பால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சிறிது சிறிதாக போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும். வேகும் வரை பொறுத்திருந்து கிளறி விடவும். பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.

சூப்பரான வெல்லம் பால் கொழுக்கட்டை.

குறிப்பு: வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். சாதாரணப் பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்தும் செய்யலாம்.

சில வீடுகளில், அரிசியை ஊறவைத்து கெட்டியாக அரைத்தெடுத்து, அதை பிழிந்தும் இந்தக் கொழுக்கட்டையைச் செய்வார்கள்.

 

Rava-Sweet-kozhukattai :| VINAYAGAR CHATHURTHI SECIAL:

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ரவை இனிப்பு கொழுக்கட்டை:
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ரவை இனிப்பு கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :

ரவை - ஒரு கப்
மைதா - கால் கப்
வெல்லம் - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

ரவையை வெறும் வாணலியில் வறுத்தெடுத்து, பொடித்துக்கொள்ளுங்கள்.

வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடித்த ரவை, மைதா, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், உப்பு, வெல்லப்பாகு சேர்த்து கட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவைக் அரைமணி நேரம் ஊறவையுங்கள்.

பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளால் பிடித்து வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்யவும்.

பிடித்துவைத்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

HOW TO MAKE SWEET KOZHUKKATTAI | VINAYAGAR CHATHURTHI SPECIAL:

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வெல்லம் பிடி கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வெல்லம் பிடி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு - 1 கப்
துருவிய வெல்லம் - அரை கப்
தேங்காய்ப் பல் - கால் கப்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
நெய் - சிறிதளவு.



செய்முறை :

பச்சரிசியை ஊறவைத்து உலர்த்தி, மாவாக அரைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு கப் மாவை வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ளுங்கள்.

தேங்காய்ப் பல்லை நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் மாவு, தேங்காய்ப் பல், வெல்லம், ஏலக்காய்த் தூள் போட்டு நன்றாகப் பிசையுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளுங்கள்.

பிசைந்த மாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து, கொள்ளவும்.

பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

செய்வதற்கு மிக சுலபமான கொழுக்கட்டை. ஆனால் ருசியோ அபாரமாக இருக்கும்.

MBBS COUNSELLING STATUS:

மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: விடுமுறையிலும் கலந்தாய்வு நடைபெறும் - ராதாகிருஷ்ணன்

எம்பிபிஎஸ் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று காலை தொடங்கியது.
மருத்துவப் படிப்புக்கான நீட் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானதைத் தொடர்ந்து,  தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வுக்கான அட்டவணை, அரசு இணையதளமான  www.tnhealth.org -யில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
முதல்நாளான ஆகஸ்ட் 24 -ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25 -ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. விடுமுறையிலும் தொடர்ந்து கலந்தாய்வு நடக்கும். அதாவது, விநாயகர் சதுர்த்தி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வில் பங்கேற்க, காசோலை எடுக்க முடியாதவர்களிடம் பணமாக பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு குறித்தத் தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்கள்...
அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்களில் காலை 9, 11, பிற்பகல் 2 மணி என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறும்.

இணையதளத்தில் வெளியீடு: மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு அட்டவணை ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு வருவோருக்கு தனித்தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது. அழைப்புக் கடிதத்தை www.tnhealth.org, www.medicalselection.org   ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியாத மாணவர்கள், தங்களின் தரவரிசையின் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

வரைவோலை: கலந்தாய்வில் பங்கேற்போர் Secretary, Selection Committee, Chennai -10 என்ற பெயரில் ரூ.500க்கான வரைவோலையைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தங்களது அசல் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அசல் சான்றிதழைச் சமர்ப்பிக்காதோருக்கு இடங்கள் ஒதுக்கப்படாது.

பொறியியல் போன்ற பிற படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் அந்தந்தக் கல்லூரிகளில் இருந்து அத்தாட்சி சான்றிதழைப் (Bonafide Certificate) பெற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்றில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள், மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்.

முதற்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் பங்கேற்காமல் தவிர்த்த மாணவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு அட்டவணை

JIO BOOKING ?? HOW TO BOOKING ??

ஜியோஃபோனை முன்பதிவு செய்வது எப்படி? எவ்வளவு செலுத்த வேண்டும்?


ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த விலையில்லா ஜியோஃபோனுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.ஒரு வேளை ஜியோ ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால், அருகில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ முகவர்களை நாடுங்கள். அல்லது ஜியோ.காம் (jio.com) என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது செல்போனில் இருக்கும் மை ஜியோ ஆப் மூலமாகவோக் கூட முன்பதிவு செய்யலாம்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடடின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த ஜூலை 22ம் தேதி, நிர்வாகி முகேஷ் அம்பானி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

அதுதான், இந்தியர்கள் அனைவருக்கும் விலையில்லா 4ஜி ஸ்மார்ட்போன். இதன் விலை பூஜியம். இதற்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையும் 3 ஆண்டுகளில் திரும்ப வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த செல்போனில் இலவச தொலைபேசி அழைப்புகள் வழங்கப்படும். மாதத்துக்கு 153 செலுத்தி அளவில்லா டேட்டாக்களையும் பெறலாம். இதே போல, டேட்டாக்களுக்கு வார மற்றும் இரண்டு நாட்களுக்கான பேக்குகளும் உள்ளன.

ஜியோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

2 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்பகுதியில் விஜிஏ கேமரா
512 எம்பி ராம் மற்றும் 4 ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் (128 ஜிபி அளவுக்கு உயர்த்திக் கொள்ளலாம்)
2,000 எம்ஏஎச் பேட்டரி
2.4 இன்ச் ஸ்க்ரீன்

இந்த செல்போனை முன்பதிவு செய்யும் போது, ரூ.500ஐ கட்டணமாகச் செலுத்தி, ஜியோ ஃபோனை பெறும்போது மீதத் தொகையான ரூ.1000ஐ செலுத்த வேண்டும்.

இந்த செல்போனை 36 மாதங்கள் பயன்படுத்திய பிறகு, திருப்பிக் கொடுத்தால், ரூ.1,500 காப்பீட்டுத் தொகை வாடிக்கையாளருக்கு திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TODAY RASIPALAN-24.08.2017:

தின பலன்-24.08.2017
மேஷம்
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ரிஷபம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மிதுனம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
கடகம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
சிம்மம்
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கன்னி
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
துலாம்
பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
விருச்சிகம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
தனுசு
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மகரம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கும்பம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
மீனம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

NEET EXAM RELATED NEWS:

நீட்' கவுன்சிலிங்: யாருக்கு 'சீட்?' : கல்வியாளர்கள் கருத்து

'நீட்' அடிப்படையில் நடக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் அடிப்படையில், மருத்துவப் படிப்புக்கான, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கவுன்சிலிங் : தனியார் கல்லுாரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கும் சேர்த்து, முதன்முறையாக, பொது கவுன்சிலிங், இன்று துவங்கி, செப்., 4ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது: நீட் தேர்வுக்கான மாநில தர வரிசை பட்டியலை ஆய்வு செய்ததில், பி.சி., - பிற்படுத்தப்பட்டவகுப்பு மாணவர்கள், 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓ.சி., - மற்ற வகுப்பு பிரிவு, 415; ஓ.பி.சி., - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு, 285 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றிருந்தால் மட்டுமே, அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக இட ஒதுக்கீட்டுக்கும், கவுன்சிலிங் நடப்பதால், பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இம்முறையால், பொதுத்தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும் அபாயமுள்ளது. எனவே, ஐ.ஐ.டி., உட்பட கல்வி நிறுவனங்களில், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' நிர்ணயித்து, கவுன்சிலிங் நடத்துவது போல, மருத்துவப் படிப்புக்கும், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தவறினால், பள்ளிக்கூடங்கள், 'நீட்' பயிற்சி என்ற பெயரில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கல்வியாளர் 'பாடம்' நாராயணன் கூறியதாவது: தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளாக, தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்து, 250 மாணவர்களே, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து, கவுன்சிலிங் நடத்தியதால் தான், பிளஸ் 1 பாடத்திட்டம் கற்பிக்காமல், நேரடியாக, பிளஸ் 2 வகுப்பு கையாளப்பட்டது. இவர்கள், மருத்துவப் படிப்பில், முதல் பருவத்திலேயே, 'அரியர்' வைக்கின்றனர்.

வாய்ப்பு அதிகம் : நீட் தேர்வு வரவேற்கத்தக்கது; சமீபத்தில் நடந்த நீட் தேர்விலும், 50 சதவீத கேள்விகள், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. மாநில பாடத்திட்டத்தை முழுமையாக படித்தவர்கள், இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.அடுத்த ஆண்டு முதல், இத்தேர்வு நடத்தும் அதிகாரத்தை, சி.பி.எஸ்.இ., அல்லாமல், தனி அமைப்பிடம் ஒப்படைக்க பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.